7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருப்பூர்,ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 571 தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கும்விழா, திருப்பூர் அருகே கணக்கம்பாளையத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, "தனியார் பள்ளிகளுக்கு இந்தாண்டு முதல் 2 ஆண்டுகளுக்கான தொடர்அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், முதல்வர் கொண்டுவந்துள்ள 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்.

பள்ளிகள் திறப்பது குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்