கோவைக்கு கடத்திவரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துவிமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கோவையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கடந்த 24-ம் தேதி கோவை வந்த பாஷா, நாசர், சஜீஃப், சாகுல் ஹமீது, யுவராஜ், தர்மராஜ் ஆகியோரிடம் சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்கத்தை உருக்கி‘பேஸ்ட்’ வடிவில் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கமிஷனுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை கடத்திவந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 6 பேரும் கைது செய்யப்பட்டு, மொத்தம் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்