உடுமலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிஹார் பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆனது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்ட மங்கலம் பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில், ரீட்டா தம்பதி வேலை செய்து வருகின்றனர்.
கர்ப்பிணியான ரீட்டாவுக்கு நேற்று திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் உதவிக்குஅழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் செல்லும்போதே வலி தாங்காமல் அந்த பெண் துடித்தார். இதையடுத்து, சாலையோரம் வாகனம் நிறுத்தப்பட்டது. செவிலியர் பர்ஹான பர்வீன் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் நலமுடன் காப்பாற்றினார். சுகப்பிரசவமான நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் அனுமதிக்கப்பட்டனர்.
அசாதாரணமான சூழலில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாமிக்கண்ணு, சாமார்த்திய மாக செயல்பட்ட செவிலியர் பர்ஹான பர்வீன் ஆகியோரை பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago