காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்துக்கு வரும்நோயாளிகள் தனியார் மையத்துக்கு அனுப்பப்பட்டு அலைகழிக்கப்படுவதை தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்தக் கட்சியின் நகரச் செயலர் சி.சங்கர் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள புகார் மனுவின் விவரம்:
சிறந்த முறையில் தரமானசிகிச்சை தரவேண்டும் என்றநோக்கத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவாக காஞ்சிபுரத்தில் ஓர் ஆராய்ச்சி மையமும், மருத்துவமனையும் கடந்த 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புற்றுநோயாளிகள் பலர் இந்த மையத்துக்கு பரிந்துரை செய்யப்படு கின்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்கும்,
மேலும் சில பரிசோதனைகளுக்கும் சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பரிசோதனைமையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இந்த மையத்தை மண்டல புற்றுநோய் மையமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ள நிலை யிலும் விலை உயர்ந்த கருவிகள், அவற்றை இயக்க சிறப்பு பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை.இந்த மையத்தில் இருந்து தனியார் ஆய்வகங்களுக்கு நோயாளிகளை அனுப்பக் கூடாது என்று மனுவில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago