புதுமையான கற்பித்தல் பற்றிய புதிய தொலைநிலை படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் கு.ரத்னகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழ கம், பெங்களூருவில் உள்ள லேர்னிங் மேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘புதுமையான கற்பித்தல் மற்றும் இணையவழி வகுப்பறைக்கான திறன்கள்’ என்ற குறுகிய கால படிப்பை தொடங்குகிறது.
தொலைநிலைக்கல்வி வாயிலாக வழங்கப்படும் இந்த படிப்பின் காலம் ஒரு மாதம் ஆகும். தற்போதைய பள்ளிக்கல்விக்குத் தேவையான செயல்பாடுகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இப்படிப்பு. மேலும் விவரங்களை பல்கலைக்கழகத்தின் (www.tnou.ac.in) இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago