விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக புதுவைமின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மழைக் காலங்களில் ஏற்படும் மின்தடையை உடனடியாக அறிய அவசர கால கட்டுப்பாட்டு அறை மின்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.
பொதுமக்கள் 0413-2339532 என்ற தொலைபேசி மூலமாகவோ, கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800 425 1912 மூலமாகவே மின்தடை குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்.
மழைக்காலத்தில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்கசிவு தடுப்பான்களை வீடுகளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்த முன்வர வேண்டும்.
விவசாய நிலங்களில் எலி,காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க சிலர் மின்வேலிகளை அமைக்கின்றனர்.
இதில் சில நேரங்களில் மனிதர்களும் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம். இதில் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளுக்கு மின் நுகர்வோரே பொறுப்பு. மின்வேலி கண்டறியப்பட்டால் மின் நுகர்வோரின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago