பண்ருட்டி திருவதிகையில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டம் 2019 20-ன் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் தார் சாலை அமைக்க பணி உத்தரவு வழங்கப்பட்டது. இதில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பணியான அக்காத்தமன் கோயில் செல்லும் சாலையை அகலப்படுத்தி (720 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலம்) புதிதாக தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணியை பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், உதவி பொறியாளர் பிரகாஷ், பணி ஆய்வாளர் சாம்பசிவம், ஒப்பந்ததாரர் சுரேஷ்பாபு மற்றும் அதிகாரிகள், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தன்,செல்வம்,ராமதாஸ், வேலு, சீத்தாராமன், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago