புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பரிந்துரையின் பேரில், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மற்றும் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மீன் வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு ‘திலேபியா மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி’ முகாம் கோர்க்காடு கிராமத்தில் நடைபெற்றது.
துறை இயக்குநர் முத்து மீனா தலைமை தாங்கினார். மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் முதன்மை செயலாக்க அதிகாரி கோவிந்த சாமி வரவேற்றார். வேளாண் அலுவலர் ராஜவேலு வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் துறையைச் சேர்ந்த சிவக்குமார் கலந்து கொண்டு திலேபியா மீன் வளர்ப்பு பற்றியும், அதன் தேர்வு முறையை குறித்தும் விரிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் மீராசாஹிப், மீன் வளர்ப்போருக்கு மீன்வளத் துறையின் மூலம் அரசு செயல்படுத்தி வரும் மத்திய அரசின் பிரதம மந்திரி மஸ்திய சம்பட யோஜன திட்டங்கள் குறித்து விளக்கினார். இப்பயிற்சி வகுப்பில், காரைக்கால் பஜன் கோவா கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நன்னீர் மீன் வளர்ப்போர் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago