மண்டபம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் மாயம்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் 4 மீனவர்கள் மாயமாயினர்.

மண்டபம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து சிப்பியான் என்பவரின் பட கில் சிப்பியான், ஆரோக்கி யம், சூசை, டேவிட் ஆகிய நான்கு மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்கள் வியா ழக்கிழமை மாலை வரை கரை திரும்பவில்லை.

இதையடுத்து ராமே சுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் நான்கு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மாயமான மீனவர்களின் உறவினர்கள் நேற்று மாலை மனு அளித்தனர். மேலும் மாயமான மீனவர்களை ஒரு விசைப் படகில் 4 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்