வடகிழக்கு பருவமழையை நம்பி நத்தம் பகுதியில் நெல் நடவு பணி மும்முரம்

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழையை நம்பி நத்தம் பகுதியில் நெல் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இதையடுத்து, நெல் நாற்றங்கால் பாவும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை நம்பி தற்போது நெல் நடவுப் பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதனால் நத்தத்தை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போதுள்ள தண்ணீர் ஒரு மாதம் வரையே போதுமானதாக இருக்கும் என்ற நிலையில், வடகிழக்கு பருமழை பரவலாக பெய்தால் மட்டுமே மேலும் உள்ள நாட்களுக்கு பயிர்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்