செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலை தயாரிப்பு பணி மும்முரம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் முடங்கி யிருந்த செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்புப் பணி தீபாவளியால் புத்துயிர் பெற் றுள்ளது.

பாரம்பரிய அடர் வண்ணங்களில் தயாரிக்கப்படும் செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைகளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது. சிறிதும் பெரிதுமாக பட்டையான கோடுகள் (அ) கட்டங்கள் (செக்டு) நிறைந்த அவற்றின் வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த சேலைகளை காரைக்குடி, கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்டோர் நெசவு செய்து வருகின்றனர். பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ‘ஷட்டில் நெசவு’ முறையில் கைத்தறியாக நெசவு செய்கின்றனர். கரோனா ஊரடங்கால் காட்டன் சேலைகள் தயாரிப்புப் பணி முடங்கியது. ஏற்கெனவே தயாரித்த சேலைகளையும் விற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில், தீபாவளியையொட்டி நாடு முழுவதுமிருந்து ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் இரவு, பகலாக சேலை தயாரிக்கும் பணியில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கானாடுகாத்தான் நெசவாளர் வெங்கட்ராமன் கூறியதாவது: அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் உள்ளிட்ட வண்ண சாயங்களை பயன்படுத்துகிறோம். இதனால் டபுள் ஷேடு கிடைக்கிறது. புடவையும் பளிச்சென்று காண்போரைக் கவர்ந்திழுக்கும் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்