எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகுதியான நிர்வாகக் குழு உறுப்பினர்கள்தான் நியமனம் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து

By செய்திப்பிரிவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகுதியானவர்களைத்தான் உறுப் பினர்களாக நியமித்திருக்கிறார்கள் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக தேர்தல் பூத் கமிட்டி அலுவலகம், இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இவற்றை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மதுரை வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்துள்ளது. உறுப்பினர்கள் நியமனத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அதிமுக வைப் பொறுத்தவரை தகுதியான உறுப்பினர்களைத்தான் நியமித்திருக்கிறார்கள் என்று கருதுகிறோம். அதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை.

திருப்பரங்குன்றம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. சூழ்நிலை காரணமாகத்தான் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கடந்த முறை இழந்தோம். இப்போது நாங்கள் மிகத் தீவிரமாகப் பணியாற்று கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்