சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு மானிய உதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மேற்கு வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கு.ஜனரஞ்சனி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மதுரை மேற்கு வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் ஆகியவை சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் 385 ஹெக்டேரில் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துணை நீர் மேலாண்மை பணிகள் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரமும் அல்லது ஆயில் இன்ஜின் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரமும், பைப்லைன் அமைக்க ரூ.10 ஆயிரமும், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி அலுவலரை 9787633257, 8940400151 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago