காய்ச்சல் வந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெய காந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பண்டிகை காலத்துக்குப் பின் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற் றைக் கடைப்பிடிக்க வேண் டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலட்சியம் காட்டக் கூடாது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago