சூளகிரி அருகே நல்லகாண கொத்தப்பள்ளி ஏரியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம், கோனேரிப்பள்ளி ஊராட்சி நல்லகாணகொத்தப்பள்ளி ஏரியில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020-210-ன் கீழ் ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:
சூளகிரி ஒன்றியம் காமன்தொட்டி ஊராட்சியில் சந்திரன் ஏரி, பிள்ளை கொத்தூர் ஏரி, பால கவுண்டன் ஏரி, திப்பே கவுண்டன் ஏரி என 4 ஏரிகள், கோனேரிப்பள்ளி ஊராட்சியில் நல்லகாணகொத்தப்பள்ளி ஏரி, குண்டன்திப்பன் ஏரி, சிங்கையன் ஏரி, பாணி ஏரி, முத்துராயன் ஏரி 5 ஏரிகள் என மொத்தம் 9 ஏரிகளில் 52 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது.
இதில் 35 ஹெக்டேரில் மீன் வளர்ப்புக்கு தகுந்த நீர்பரப்பு உள்ளதால் 1 ஹெக்டரில் ரூ.5 ஆயிரம் மீன் விரலிகள் வீதம், கட்லா, ரோகு மீன் வகைகள் மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் இருப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத் துறை உதவி இயக்குநர் மணிகண்டன், மீன் வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணியன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ராஜாசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, விஜய், விமல் ரவிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கோப்பம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago