திமுகவில் தருமபுரி மாவட்டம் தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு என்று இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெறவும் தருமபுரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்குஎன்று இரு மாவட்டங்களாகப் பிரிக்கப் படுகிறது.
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிப்படி, அரூர் (தனி) ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளும், தருமபுரி மேற்கு மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 2 சட்டப் பேரவைத் தொகுதிகளும் இருக்கும்.தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார். நாட்டான் (எ) பாலு, என்.சந்திரசேகரன், டி.முனிராஜ், எஸ். வாசுதேவன், ஜி.திருமால்செல்வன், பி.தனேந்திரன், இரா.சிவன், பூங்கொடி, வே.தங்கமணி ஆகியோர் பொறுப்புக்குழு உறுப்பினர் களாக நியமிக்கப்படு கின்றனர்.தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக பி.என்.பி. இன்பசேகரன் நியமிக்கப்படுகிறார். ஜி.வி.மாதையன், டி.சுப்பிரமணி, ஆ.மணி, கா.காளியப்பன், பி.கே.துரைசாமி, ராஜகுமாரி மணிவண்ணன், எம்.மாதேசன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் படுகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago