பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (53). இவர், காவேரிப்பட்டணத்தைச்சேர்ந்த தனது உறவினரான ரங்கநாதன் (56) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தருமபுரியில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், நேற்று மாலை இருவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது, தனியார்பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இவ்விபத்தில் கோவிந்தராஜ், ரங்கநாதன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்