தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் 9-வது கப்பல் சரக்கு தளத்தில் 27.10.2020 அன்று, இந்தோனேஷி யாவில் இருந்து வந்த எம்.வி. ஓசன் டீரீம் என்ற கப்பலில் இருந்து 56,687 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இம்கோலா கிரேன் கம்பெனி பிரைவேட் லிமிடேட் நிறுவனம் மூலம் இயக்கப்படும் மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த கப்பல் முகவர் தூத்துக்குடி வோல்டுவைடு ஷிப்பிங் இன்ங் லிமிடெட் மற்றும் தூத்துக்குடி ஸ்டிவிடோர் ஏஜெண்ட்வில்சன்ஸ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட். அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களை துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் தா.கீ.ராமச்சந்திரன் பாராட்டினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago