நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரத்தில், சுனாமி மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசியதாவது:
திருப்பூண்டி கிழக்கு கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 156 பேர், பாலக்குறிச்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 23 பேர், விழுந்தமாவடியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 163 பேர், காரப்பிடாகை தெற்கு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 57 பேர் என மொத்தம் 399 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 36 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகை கோட்டாட்சியர் ரா.பழனிகுமார், வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago