கோட்டுச்சேரியில் சீதளாதேவி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள கோடீஸ்வரமுடையார் தேவஸ்தானத்துக்குட்பட்ட சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் கடந்த மார்ச் மாதம் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. பின்னர், கரோனா ஊரடங்கு காரணமாக குடமுழுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 26-ம் தேதி மாலை முதல்கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலையுடன் 6 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், குடமுழுக்கு நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பரிவார தெய்வங்களான வெள்ளை விநாயகர், பூரனை புஷ்கலை உடனுறை உழவடை மூர்த்தி அய்யனார், பிடாரி அம்மன், எல்லைப் பிடாரி ஆகிய கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்