வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்கள் குடும்பத்துடன் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் மீனவர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் மனு அளித்ததைத் தொடர்ந்து, வேதாரண்யம் வட்டாட்சியர் முருகு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், மணியன்தீவு, வானவன்மகாதேவி உட்பட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இதற்கான முடிவு எட்டப்படும் வரை 8 ஆயிரம் மீனவர்கள் இன்று(நேற்று) முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை யிழந்துள்ளனர். எனவே, இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்