மதுக்கடை அமைக்க மக்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் ஒன்றியம் திருவை யாறு அருகேயுள்ள உமையவள் ஆற்காடு, நாகத்தி ஆகிய 2 கிராமங்களுக்கும் இடையே சாலையோரத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தக் கடை நவ.1-ம் தேதி திறக்கப்படும் என தகவல் வெளியானது.

இதையடுத்து, உமையவள் ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மதுக்கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்