நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் பகுதியைச் சேர்ந்த பெண், குமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
`எனது கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 16 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். எனது பக்கத்து வீட்டில் நடைபெற்ற கட்டிடப் பணிக்கு கொத்தனார் வேலை செய்ய வந்த லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (26) என்பவர் , எனது மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி பள்ளிவிளையில் உள்ள தனது தோழி வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற எனது மகளை அதன்பின் காணவில்லை.
லெவிஞ்சிபுரம் வேல்முருகனும், பள்ளிவிளை மாரி (50) என்பவரும் சேர்ந்து, என் மகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் சென்று எங்கோ மறைத்து வைத்துள்ளனர் என அறிகிறேன். இது சம்பந்தமாக கடந்த 26-ம் தேதி நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அந்த புகாருக்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.சாதாரண பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே, 16 வயதான எனது மகளை மீட்டு, அவளை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago