தூத்துக்குடிக்கு மேலும் 25 டன் வெங்காயம் கொள்முதல் கிலோ ரூ.45-க்கு கிடைப்பதால் ஒரே நாளில் 3 டன் விற்பனை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் அம்மா பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில், பெரிய வெங்காயம் கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்யப்படுவதை, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், ஆட்சியர் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்யதமிழக முதல்வர் உத்தரவிட்டுள் ளார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், தேசிய கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் நாசிக்கில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கொண்டுவந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு விநியோகம் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் 10 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. ஓரிரு தினங்களில் மேலும் 25 டன் கொண்டு வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி அம்மா பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3.2 டன் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படும்.

மேலும், தூத்துக்குடி மதுரா கோட்ஸ் சுய சேவைப் பிரிவு, துறைமுகம் பகுதி, லயன்ஸ் டவுன் பகுதி, முத்துகிருஷ்ணாபுரம், மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது, என்றார் ஆட்சியர்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிசந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குநர் அந்தோணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்