கயத்தாறு முதல் செட்டிக்குறிச்சி வரையிலான 11 கி.மீ. சாலைஓராண்டுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இந்த சாலையில் செட்டிக்குறிச்சி முதல் கோனார்கோட்டை புதூர் வரை சுமார் 2 கி.மீ.தூரம் வரை சாலை பெயர்ந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையை தரமாக புதுப்பிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிநடந்தது. ஓலைக்குளம் விலக்குஅருகே நடைபெற்ற போராட்டத்துக்கு செட்டிக்குறிச்சி கிளைச் செயலாளர் பி.மாரிச்செல்வம் தலைமை வகித்தார். கயத்தாறு ஒன்றிய செயலாளர் எம்.சாலமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிபாண்டியன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago