இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) வகுப்பினருக்கு மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே வழங்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விளாத்திகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன் ரெஸ்லி தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் அழகு முனியசாமி, சத்யா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago