கோவில்பட்டி வீடுகளில் மிரட்டல்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் வீடுகளுக்கு சிலர் சென்று, வீட்டின் முகப்பில், வார்டு எண், கதவு எண், சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகிய விவரங்கள் கொண்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட்டை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என, வீடுகளில் உள்ள பெண்கள், முதியவர்களை மிரட்டி வருகின்றனர்.

வீட்டில் இருப்பவர்கள், `வேண்டாம்’ எனக்கூறினால், `வீட்டின் குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும்’ எனக் கூறி மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து, அவர்களிடம் பலரும் ரூ.60 வரை கொடுத்துள்ளனர்.

இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்து முன்னணி நகரப் பொதுசெயலாளர் சுதாகரன் தலைமையில், நகராட்சி மேலாளர் (பொறுப்பு) வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையர் ராஜாராமிடம், இதுகுறித்து கேட்டபோது, `முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்