கோவில்பட்டி: குளத்தூர் அருகே வேப்பலோடை கழுகாசலபுரத்தை சேர்ந்தவர் உப்பளத் தொழிலாளி பொன்மாரியப்பன் (42). இவர் குளத்தூரையடுத்த பனையூரில் வசித்து வந்தார். கடந்த 20-ம் தேதி பனையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த தெற்கு பனையூரை சேர்ந்த அழகுலிங்கம் என்பவர் ஓட்டிச்சென்ற சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்மாரியப்பன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பொன்மாரியப்பன் உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே இடைசெவல் நடுத்தெருவைச் சேர்ந்த விவசாயி நம்பெருமாள் (80). இவர் தனது விவசாய நிலத்துக்கு, தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த நம்பெருமாள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். நாலாட்டின்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago