திருநெல்வேலி: நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வருவாய்த்துறை அலுவலக சங்க வளாகத்தில், புத்தக கண்காட்சி தொடங்கியுள்ளது. மதுரை மீனாட்சி புக் ஷாப் நிறுவனம் நடத்தும் இக்கண்காட்சி நவம்பர் 5-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, ரமணிச்சந்திரன், கண்ணதாசன், பாலகுமாரன் உள்ளிட்டோரின் நாவல்கள், வைரமுத்து, பா.விஜய் உள்ளிட்டோரின் கவிதை நூல்கள், சுயமுன்னேற்றம், ஆன்மிகம், கட்டுரைகள், இலக்கியம், சொற்பொழிவு, இதிகாசங்கள், சமையல், குழந்தை வளர்ப்பு, சிறுதொழில், டிக்ஸ்னரி, போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு பதிப்புகள் வெளியிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தகங்களுக்கான விலையில் 10 சதவீதம் தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago