குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்/தூத்துக்குடி: நாகர்கோவில் கோட்டாறு கலைவாணர் நகரை சேர்ந்தவர் நடராஜன்(20). திருட்டு, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கன்னியாகுமரி சின்னமுட்டத்தைச் சேர்ந்த சுனிஷ்கர் (20) என்பவர், கொலை முயற்சி வழக்கில் கோட்டாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன்(26) என்பவர் குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும், ஆட்சியர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முத்தையாபுரம் சுபாஷ்நகரைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் (22) என்பவர், 5-ம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல், மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த காந்தி மகன் அய்யனார்(30), வாலமலை மகன் சூர்யா(20) ஆகிய இருவரும், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி செயின் பறிப்பு வழக்கில் கயத்தாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். பாளையங்கோட்டை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்