நாகர்கோவிலில் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கஞ்சாவிற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி, கோட்டாறு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், கோட்டாறைச் சேர்ந்த செல்வ விஜய் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago