குமரி ஆட்சியராக எம்.அரவிந்த் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் 51-வது ஆட்சியராக எம்.அரவிந்த் நேற்று மாலை பொறுப்பேற்றார்.

குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இணை இயக்குநராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநில நிதித்துறை இணைச் செயலாளராக பணியாற்றி வந்த எம்.அரவிந்த், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை குமரி மாவட்டத்தின் 51-வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முந்தைய ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆட்சியர் எம்.அரவிந்த் 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். சிதம்பரத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்