மாணவர்கள் ஆளுமை கொண்டவராக இருக்க படிப்புடன் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுரை

By செய்திப்பிரிவு

மாணவர்கள் படிப்புடன் தனித் திறமைகளை வளர்த்துக் கொண் டால் முழுமையான ஆளுமை கொண்டவராக இருக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் காணொலி ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடப்பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக் கலாம். சாதிப்பதற்கு வானம் கூட எல்லை இல்லை. மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்க கடினமாக உழைக்க வேண்டும். நல்ல வாய்ப்பு களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும். மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தின் மூலம் தங்களின் அறிவை மேலும் வளர்த் துக் கொள்ளலாம். படிப்புடன் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டால் முழுமையான ஆளுமை கொண்டவராக மாணவர் கள் இருக்கலாம்’’ என்றார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் விழாவுக்கு தலைமை தாங்கி பேசும்போது, ‘‘அனைவருக்கும் கல்வி கிடைக்கும்போது ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறிவிடும். ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் மூலம் இதுவரை 730 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இதில் 80 சதவீத மாணவ, மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது’’ என்றார்.

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் பேசும்போது, ‘‘மாணவர்களின் அறிவாற்றல் தங்களுடைய அன்றாட வாழ்க் கைக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக் கும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். மாணவர்கள் படைப்பாற் றலுடன் வாழ்வில் சாதிக்கும் எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

விஐடி பல்கலைக் கழகத்தில் ‘ஸ்டார்ஸ்’ திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்து முதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாணவர், ஒரு மாணவி என மொத்தம் 72 மாணவர்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி, உணவு மற்றும் விடுதி என மொத்த செலவையும் விஐடி இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, விஐடி துணை வேந்தர் ராம்பாபு கொடாளி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் கே.சத்தியநாராயணன், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.மார்ஸ், ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்