தி.மலை மாவட்டத்தில் 46 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் ஆட்சியர் கந்தசாமி தகவல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 46 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களை மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடி பெயர் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், அனைத்து கட்சி பிரநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், 46 வாக்குச்சாவடிகள் இடமாற் றம் செய்யவும் மற்றும் 7 வாக்குச்சாடிவகளின் பெயரை திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்துக் கட்சி பிரிதிநிதிகளுக்கும் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்து, வேறு வாக்குச் சாவடியை மாற்றம் செய்யவும் மற்றும் பெயர் திருத்தம் செய்ய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கண்டறிந்து தெரிவித்தால், மாநில தேர்தல் ஆணையம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

இதையடுத்து, ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்