ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 114 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 968-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 17 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 596-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,588-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,493-ஆக அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்