டாஸ்மாக் மதுபான கடையில் ரெய்டு

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேலூர்் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஹேமசித்ரா, தலைமையிலான குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் பென்னாத்தூரில் உள்ள இரண்டு மதுபான கடைகள் மற்றும் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததின் மூலமாக வசூல் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்