பசுமை நிறைந்த வனப்பகுதியாக மாற்ற மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம் தன்னார்வலர்களுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அழைப்பு

By செய்திப்பிரிவு

சின்ன வேப்பம்பட்டு மலையடி வாரப்பகுதியை பசுமை நிறைந்த வனப்பகுதியாக மாற்ற பசுமை தன்னார்வலர்கள், திட்ட இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டு மலையடிவார பகுதியில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அந்த பகுதியை பசுமை வனப்பகுதியாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, இப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

சின்ன வேப்பம்பட்டு மலையடி வாரத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய தேவையான மரக்கன்றுகள், இயற்கை எரு உள்ளிட்டவற்றை தாமாக கொண்டு வந்து பணியாற்றவும், மரக்கன்றுகளை வைக்க பசுமை தன்னார்வலர்கள் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 89255-04954 அல்லது 89255-04956 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்