சென்னை: மார்கழி மாதம் பவுர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று `திருவாதிரை' திருவிழா `ஆருத்ரா தரிசனம்' திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை நோன்பு என்பது திருவாதிரை நட்சத்திரனுடன் கூடிய பவுர்ணமி நாளில் உபவாசம் இருந்து, சிவபெருமானை வழிபடும் நாள். அந்த வகையில் வடபழனி முருகன் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து நடராஜர், பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் நடக்கிறது. பிறகு, காலை 5 மணிக்கு ஊடல் உற்சவம் நடக்கிறது. அதேபோல மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜர், பெசன்ட்நகர் ரத்னகிரீஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் இன்று நடக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago