கோவை ராமநாதபுரம் 80 அடி சாலை ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இடத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பு செய்திருந்தவருக்கு நோட்டீஸ் அளிக் கப்பட்டது. இருப்பினும் ஆக்கிர மிப்புகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து, நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின் பேரில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஜெயின் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ராமநாதபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அந்த இடம் மாநகராட்சி சாலைக்கானது. 4 சென்ட் இடத்தின் மதிப்பு சுமார் ரூ.1.2கோடி. கடந்த பல ஆண்டுகளாக இந்த இடம் ஆக்கிரமிப்பில் இருந்தது. மீட்கப்பட்டுள்ள இடத்தை சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago