கோவையில் இதுவரை 93.6 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி :

இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கோவையில் 18 வயதுக்கு மேற்பட்ட 26.11 லட்சம் பேருக்கு(93.6 சதவீதம்) முதல் தவணையும், 19.34 லட்சம் (68 சதவீதம்)பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் இதுவரை நடைபெற்ற 14 சிறப்பு முகாம்கள் மூலம் மட்டும் 12.80 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரும் 18-ம் தேதி 15-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 850 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் இருப்பதால், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 71(1)-ன் படி சந்தைகள், மால்கள், திரையரங்குகள், பிற பொழுதுபோக்கு இடங்கள், பள்ளி, கல்லூரிகள், விளையாட்டு திடல்கள், உணவகங் கள் ஆகிய இடங்களின் உரிமையாளர்கள் வாடிக்கை யாளர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE