கிரிப்டோகரன்சி என்றால் என்னவென்று தெரியாது : முன்னாள் அமைச்சர் தங்கமணி தகவல்

By செய்திப்பிரிவு

கிரிப்டோகரன்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை; என் வீட்டில் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியின் வீடு அமைந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அவரது வீடுகளில் நேற்று முன்தினம் சேலம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இரவு சோதனை முடிந்ததைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் வீட்டில் இருந்து ஒரு செல்போன் தவிர வேறு எந்த ஆவணமும் பறிமுதல் செய்யவில்லை. ரூ.2 கோடி ரொக்கம், ஒரு கிலோ தங்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை. நான் சட்டத்தின் மீதும், நீதியின் மீதும், ஆண்டவன் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன். நிச்சயமாக நான் இதில் இருந்து மீண்டு வருவேன். கிரிப்டோகரன்சி என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. மற்ற அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்ததற்கு என்ன காரணம் என்றும் தெரியாது. ஆனால், எனது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு செந்தில் பாலாஜியின் பழிவாங்கும் நடவடிக்கைதான் காரணம் என்பது தெரியும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்