மத்திய அரசு உத்தரவுப்படி மின் இணைப்பு பெற ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மின் இணைப்புகளை காலக் கெடுவுக்குள் தர வேண்டும் என்று மின்துறை தலைமை பொறியாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர், மின்துறை கண்காணிப்பு பொறியாளர், செயற் பொறியாளர்கள் என 10 மின்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
மின் இணைப்பு பெற வும், மாற்றியமைக்கவும் இணைக்கப்பட வேண்டிய கட்டாய ஆவணங்களை குறைத்தும், புதிய இணைப்பு வெளியிடு வதற்கான காலக்கெடு மத்திய அரசு உத்தரவு விதிகள்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டம் 2003-ன் படி தரப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய அரசு மின்நுகர்வோர் உரிமை விதிகளில் மின் இணைப்பை பெற தேவையான ஆவணங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. அதன்படி இரண்டு ஆவணங்கள் விண் ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. 10 கிலோவாட் வரை விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றும், புதிய இணைப்பு கோரும் இடத்துக்கான விண்ணப்பதாரரின் உரிமை சான்று ஆகிய இரண்டும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
மின் இணைப்புகளை தர காலக்கெடுவும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மெட்ரோ நகரங்களில் 7 நாட்களுக்குள்ளும், நகராட்சி பகுதிகளில் 15 நாட்களிலும், கிராமப் பகுதிகளில் 30 நாட்களில் புதிய இணைப்பையோ, மாற்று மின் இணைப்போ தர வேண்டும்.
அனைத்து நிர்வாக பொறியாளர்களும் மத்திய அரசு பிறப்பித்த விதிகளை கடைபிடிக்க வேண்டும். மத்திய அரசு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago