மதுரையில் தக்காளி விலை குறைந்தது :

By செய்திப்பிரிவு

வெளிமாநிலங்களில் இருந்து 25 லாரிகளில் தக்காளி நேற்று மதுரைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆகக் குறைந்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அடைமழையாகப் பெய்ததால் காய்கறி செடிகளும், காய்கறிகளும் அழுகி விளைச்சல் பாதிக்கப்பட்டது. வெளி மாநிலங் களிலும் மழையால் தக்காளி வரவில்லை.

இதனால் தக்காளி உட்பட அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தக்காளி கிலோ ரூ.150 வரை உயர்ந்தது.

இந்நிலையில் சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு 25 லாரிகளில் தக்காளி நேற்று வந்தது. அதனால் தக்காளி விலை கிலோ ரூ.30 ஆகக் குறைந்தது.

இருப்பினும் வியாபாரிகள் தக்காளி கிலோ ரூ.70 வரை விற்பனை செய்கின்றனர். இதேபோல் வெண்டைக்காய், கத்தரிக்காய், சுரைக்காய், கேரட், பீன்ஸ், பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட மற்ற காய்கறிகள் விலையும் குறையவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்