மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் ஆலை கழிவுகள் : காவல் நிலையத்தில் புகார்

மதுரை தெப்பக்குளம் வைகை ஆற்றில் ரைஸ் மில் சாம்பலை கொட்டியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றங்கரையோரம் வசிப்போர் குப்பைகளை ஆற்றில் கொட்டுகின்றனர். தனியார் நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வரும் கழிவுநீர், அரசு ராஜாஜி மருத்துவமனை கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டமும், மண்வளமும் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதுரை தெப்பக்குளம் வைகை ஆற்றின் கரையில் ரைஸ் மில் கழிவான சாம்பலை லாரியில் கொண்டு வந்து கொட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் காற்று வீசும்போது சாம்பலின் தூசி பறந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த சாம்பல் குவியலால் மழைக்காலங்களில் ஆற்றின் நீரோட்டம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜன் தலைமையிலான பொதுமக்கள் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ஆற்றில் கழிவுகளை கொட்டியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்