கழிப்பிட வசதியை நிறைவேற்றியதில் தமிழகம் சிறப்பிடம் : அன்னை தெரசா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி புகழாரம்

By செய்திப்பிரிவு

பள்ளிகள், வீடுகளில் கழிப்பிட வசதியை ஏற்படுத்தும் திட்டத் தை தமிழகம் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளது என்று ஆளு நர் ஆர்.என்.ரவி பாராட்டினார்.

மதுரை காமராசர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள மு.வ. அரங்கில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல் கலைக்கழகத்தின் 29-வது பட்ட மளிப்பு விழா நேற்று நடந்தது. அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜ யகுமார் வரவேற்றார்.

விழாவில் எம்.ஏ., எம்.பில்., பி.எச்டி. முடித்தவர்கள் உட்பட 549 பேருக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

பிற மாநிலங்களைவிட தமி ழகத்தில் மகளிர் கல்வி அதி கரித்துள்ளது. பட்டம் பெறுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேற வேண்டும்.

பல்வேறு துறைகளில் முடிவு களை எடுக்கும் இடத்தில் பெண் கள் உள்ளனர். இருப்பினும் அவர்களின் பாதுகாப்பு குறிப் பிடத்தக்க அளவில் இல்லை. படித்தாலும், சிறந்த வேலைக்குப் போவதில்லை என்ற நிலை இருக்கிறது.

பாதுகாப்பு துறை உள்ளிட்ட சில இடங்களில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் அதிகளவில் இல்லை.

கல்வி நிலையங்களில் கழிப்பிட வசதி இல்லாமல் இருப்பதை அறிந்து, அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பள்ளிகள் மட்டுமின்றி வீடு களிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் சிறந்த முறையில் நிறை வேற்றியுள்ளது.

இருப்பினும் பெண்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற நிறைய திட்டங்களை கொண்டுவர வேண்டும். கல்லூரி, பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். பெண் கள் முன்னேற்றத்தால் மட்டுமே ஒரு நாடு தலைசிறந்த நாடாக மாறும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஆந்திரா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜமுனா துவுரு ஆகியோரும் பேசினர்.

விழாவில் உயர் கல்வித் துறை செயலர் கார்த்திகேயன், அன்னை தெரசா பல்கலை. பதி வாளர் (பொறுப்பு) சில்டா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்