தனியார் மயமாக்குவதை கண்டித்து - வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் :

பொதுத் துறை வங்கி அலு வலர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்றும், இன்றும் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்தது. முதல் நாளான நேற்று வங்கிப் பணிகளைப் புறக்கணித்து அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மேலவெளி வீதி ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமரன், ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க தலைவர் செந்தில்ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். நிர் வாகிகள் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள 600 வங்கி கிளைகள் மூடப்பட்டன. 3 ஆயிரம் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். ரூ.500 கோடி வரை பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது என்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிரதானக் கிளை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சம் மேளனத்தின் துணைத் தலைவர் பாலாஜி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 175 பொதுத் துறை வங்கிகளில் பணிபுரியும் 2,500-க்கும் மேற்பட்ட அலு வலர்கள், ஊழியர்கள் இப்போராட் டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 78 பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்ட மொத்தம் 189 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணிபுரியும் 300 பணியாளர்கள், அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர்.

இதனால் சுமார் ரூ.500 கோடிக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அலு வலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE