2 பவுன் நகையை தர மறுத்ததால் பெண்ணைக் கொன்ற இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: 2 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்து புதைத்த இளைஞரை வாழவந்திநாடு காவல் துறையினர் கைது செய்தனர்.

கொல்லிமலை அரியூர்நாடு ஊராட்சியில் உள்ள பரவாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பங்காரு என்பவரின் மகள் ரேணுகா (21). இவர் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி அதே பகுதியில் விவசாய நிலத்தில் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. வாழவந்திநாடு காவல் துறையினர் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் மாயமான ரேணுகா எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி (23) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ரேணுகாவிற்கு ரஜினியுடன் பழக்கம் இருந்தது. ரேணுகா அணிந்திருந்த 2 பவுன் நகையை ரஜினி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட தகராறில் ரேணுகாவை கீழே தள்ளியபோது அங்குள்ள பாறையில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது பிரேதத்தை அங்குள்ள விவசாய நிலத்தின் அருகே புதைத்துவிட்டு ரஜினி தலைமறைவானார். இதையடுத்து ரஜினியை வாழவந்திநாடு காவல் துறையினர் கைது செய்தனர், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்