மக்களைத் தேடி சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை மனுக்கள் அளித்த கிராம மக்கள் :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: நாமக்கல் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் லக்கபுரம், நாட்டாமங்கலம், கல்யாணி, நவணி, ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கதிராநல்லூர் மற்றும் கண்ணூர்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி சட்டப்பேரவை உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் தலைமை வகித்து, கிராமங்களில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விரைந்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

மேலும், கல்யாணி ஊராட்சி, பெரிய தொட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்