கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 280 இடங்களில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கவுள்ளன.
முகாம்களில் பங்குபெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சுன்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் அளிக்கப்படும்.
முகாமில், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக இந்த சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் திட்டங்கள், கால்நடை வளர்ப்பில் உண்டாகும் சந்தேகங்களுக்கும் வல்லுநர்களிடமிருந்து பதில் பெறலாம். முகாம்களில், கிடேரி கன்று பேரணி நடத்தி, சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது என ஈரோடு ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago