ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகையினம் மற்றும் வரியில்லா இனங்களை வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வரி இனங்களை செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் வரி செலுத்துவது குறித்து, ஒலிப்பெருக்கி மூலமும், வீடு, வீடாகச் சென்றும் அறிவுறுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில், வீடு, வீடாகச் சென்ற அலுவலர்கள் வரி இனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தினர். இதனிடையே, மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில், கடந்த ஐந்து ஆண்டுக்கு மேலாக சொத்து வரி செலுத்தாத இரு வீடுகளின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago